திரு. ஆனந்த பாரதி அவர்களின் சன்மார்க்க வகுப்புகள்

1. சன்மார்க்க அடிப்படை வகுப்பு: 


Audio:

சுத்த சன்மார்க்க அடிப்படை வகுப்பு 

Video: 

 சுத்த சன்மார்க்க ஞானம் 

பாடத் தலைப்புகள்:

1. வள்ளலார் ஓர் அறிமுகம் தத்துவ நோக்கில்

2. சுத்த சன்மார்க்கம் ஓர் அறிமுகம்

3. சுத்த சன்மார்க்கத்தில் கடவுள் நெறி

4. சுத்த சன்மார்க்கத்தில் உயிர்களின் உண்மை

5. சுத்த சன்மார்க்கத்தில் ஆணவ மல உண்மை

6. சுத்த சன்மார்க்கத்தில் ஆணவ மல நீக்கம்

7. சுத்த சன்மார்க்கத்தில் மாயையின் விளக்கம்

8. சுத்த சன்மார்க்கத்தில் 36 தத்துவங்களின் விளக்கம் ‍பகுதி 1

9. சுத்த சன்மார்க்கத்தில் 36 தத்துவங்களின் விளக்கம் பகுதி 2

10. சுத்த சன்மார்க்கத்தில் மாயையின் நீக்கம்

11. சுத்த சன்மார்க்கத்தில் கன்ம மல உண்மை

12. சுத்த சன்மார்க்கத்தில் கன்ம மல நிவர்த்தி

13. சுத்த சன்மார்க்கத்தில் மனித தேகத்தின் அருமை

14. சுத்த சன்மார்க்கத்தில் ஆன்ம லாபம்

15. சுத்த சன்மார்க்கத்தில் பெரு நெறி ஒழுக்கங்கள் பகுதி 1

16. சுத்த சன்மார்க்கத்தில் பெரு நெறி ஒழுக்கங்கள் பகுதி 2

17. சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்

18. சத்திய தருமச்சாலையும், ஜீவகாருணிய ஒழுக்கமும்

19. சுத்த சன்மார்க்கத்தில் சத்திய ஞானசபை

20. திருஅருட்பா வரலாறும், சித்திவளாக சிறப்பும்

வள்ளல் பெருமானின் வரலாறு, சுத்த சன்மார்க்கத்தின் அடிப்படை முதலாக. வள்ளல் பெருமான் அருளிய தருமச்சாலை, சத்தியஞான சபை, சமரச சுத்த சன்மார்க்கம் அதன் கொள்கைகள் வள்ளலாரின் சித்தி முதலிய அத்தனை விஷயங்களையும், வள்ளல் பெருமானுடைய அருளிச் செயல்களில் இருந்து விளக்கும்மிக பயனுள்ள வகுப்பு. 

சன்மார்க்கத்தைப் புரிந்து கொள்ள நினைக்கும்அனைவருக்கும் இந்த வகுப்பு பேருதவியாகும்.

2. ஒழிவில் ஒடுக்கம்: 

Audio:

ஒழிவிலொடுக்கம் மூலமும் உரையும் - ஒலி நூல் வடிவம் (Audio MP3 Book)

Video: 

     ஒழிவிலொடுக்கம் – அறிமுகம்

    ஒழிவில் ஒடுக்கம் நூல் - வகுப்பு

 "ஒழிவில் ஒடுக்கம்" என்பது சீர்காழிக் கண்ணுடைய வள்ளலால் எழுதப்பட்ட சைவ சித்தாந்த நூலாகும். இந்நூல், சரியை, கிரியை, யோகம் போன்ற வழக்கமான சைவ வழிபாட்டு முறைகளுக்குப் பதிலாக, ஞானம் மற்றும் ஆன்மீகத்தை மையமாகக் கொண்ட ஒரு அணுகுமுறையை முன்வைக்கிறது. 

திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் அருளிய விளக் கத்துடன் வடலூர் வள்ளலார் (1851)  பதிப்பித்த இந்த நூலினை சன்மார்க்கத்தின் வழிநின்று திரு ஆனந்த பாரதி அவர்கள் இங்கு விளக்கியுள்ளார்கள். முழு நூலையும் கேட்டு பயன் பெறுக.. 

3. சின்மய தீபிகை:

Audio:

சின்மய தீபிகை மூலமும் உரையும் - ஒலி நூல் - Chinmaya Deebigai Songs and Explanations- Audio Book MP3

Video: 

    "சின்மய தீபிகை” -நூல் அறிமுகம்

     சின்மய தீபிகை” -நூல் வகுப்பு

வள்ளற் பெருமானார் தனது 34 வது அகவையில் சென்னையில் வாழ்ந்த காலத்தில் 1857 ஆம் ஆண்டு முதன்முதலாக "சின்மய தீபிகை" என்னும் நூலினைப் பதிப்பித்தார்கள். பெருமான் நிறைவாக பதிப்பித்தது இந்த நூலே. பெருமானார் பதிப்பில் இன்னூல் ஆசிரியர் குறித்த குறிப்புகள் ஏதும் காணக்கிடைத்தில, பிற்காலப் பதிப்புகளான இராமனந்த யோகியார் பதிப்பு (1907) மற்றும் குமாரதேவராதினப் பதிப்புகளில் ( நல். முருகேச முதலியார் குறிப்புரை பதிப்பு, 1971 & 1997) இன்னூல் விருத்தாசலம் குமாரதேவ சுவாமிகள் ஆதீனத்தின் கருத்தருள் ஒருவரான சொக்கலிங்க சிவப்பிரகாச சுவாமிகளுக்கு (20 ஆம் பட்டம்) குருவாய் விளங்கிய முத்தையா சுவாமிகள் அருளிச் செய்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

4. அருட்பெருஞ்ஜோதி அகவல்:


அருட்பெருஞ்ஜோதி அகவல் என்பது வள்ளலார் இராமலிங்கர் அருளிய ஒரு பாடல் ஆகும். இந்த பாடல் சன்மார்க்கத்தின் முக்கியத்துவத்தை விளக்குகிறது, மேலும் இறைவனின் அருள் மற்றும் கருணையை வலியுறுத்துகிறது. இது அருட்பெருஞ்ஜோதி அருட்பா (திரு அருட்பா) என்ற தொகுப்பில் அடங்கியுள்ளது


திருஅருட்பா வள்ளலார் பாடல்களுக்கு விளக்க உரைகள்

திருஅருட்பா விளக்க உரைகள் ‍ ஆறாம் திருமுறை

6. திருஅருட்பா உரைநடை:


வள்ளல் பெருமானின் முதல் மாணவர் தொழுவூர் வேலாயுதனார் இயற்றிய பாடல்களின் விளக்கம். 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அவலத் தழுங்கல் - திருஅருட்பா பதிகம் ஒரு பார்வை

    அவலத் தழுங்கல்  - திருஅருட்பா பதிகம் ஒரு பார்வை “திருஅருட்பாச் செல்வர்” திரு. ஆனந்த பாரதி. பெங்களூரு. வணக்கம், திரு அருட்பா பதிகங்களையு...