உ
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருஅருட்பிரகாச வள்ளலார் திருஅடிகளே சரணம்!!!
திரு. ஆனந்தபாரதி அவர்களைப் பற்றிய குறிப்புகள்:
சிறப்புப் பெயர்: திரு.லோக. ஆனந்த பாரதி
(வள்ளலாரின் வழி வழித் தொண்டர் திரு. வடலூர் சீனி சட்டையப்பர் ஐயாவின் மாணவர்களில் ஒருவர்)
இயற்பெயர்: ஆனந்தன்
தந்தை : கோ. லோகநாதன் அவர்கள்
தாய் : அலமேலு அம்மையார்
கல்வி : முதுகலை (கணினி அறிவியல்), முதுகலை (தமிழ்), இளங்கலை கல்வியியல்.
மனைவி: தனலட்சுமி அம்மையார்
(தொழுவூர் வேலாயுதனாரின் பெயர்த்தி திருமதி அருளாம்பிகை அம்மையாரின்
மாணவி, இவர் “சன்மார்க்க சாதகர்கள்” என்னும் பெண்கள் பங்குபெறும் மெய்நிகர்
அமைப்பை நடத்திவருகின்றார். திருவருட்பா இசைத் தொண்டு செய்து வருகின்றார்)
மகள்: தாயான செல்வம்
முகவரி: 2/47/3, தயானந்தம், மறைமலை தெரு, வள்ளலார் நகர்,
வடலூர், கடலூர் மாவட்டம் தமிழ் நாடு.
தொலைப் பேசி: +91 9952654143
மின்னஞ்சல்: loga.anandhabharathi@gmail.com
இணையம்: https://anandhabarathi.blogspot.com/
YouTube Channel : Anandha Bharathi - YouTube
Events Updates: Vallalar Speeches - YouTube
Blogs: VallalarSpace - Anandha Barathi
எழுதிய நூல்கள்:
1. திருமுதுகுன்றத்தில் திருவருட்பிரகாசர்
2. திருஅருட்பா - திருவருண்முறையீடு - விளக்கம் (கட்டுரைத் தொகுதி)
3. இணையத்தில் சன்மார்க்கம் (கட்டுரைத் தொகுதி)
4. திருஅருட்பா பதிகம் விளக்கங்கள் (கட்டுரைத் தொகுதி)
5. சன்மார்க்கப் பிரபந்தங்கள்
6. அருட்பெருஞ்சோதி அகவல் ஒப்பாய்வுரை
7. ஒழிவிலொடுக்கம் - சன்மார்க்க உரை
8. சின்மய தீபிகை - சன்மார்க்க உரை
9. ஆன்மிக இரசவாதம்
திரு. ஆனந்த பாரதி அவர்களின் சன்மார்க்கம் தொடர்பான முக்கியப் பணிகள்:
நிறைவுற்றப் பணிகள்:
1.திருஅருட்பா உரைநடைப்பகுதி முழுவதும் Sanmarkkam.com உடன் இணைந்து ஒலி நூலாக்கம் (Audio Book) செய்தது.
Link: ThiruArutpa & Urainadai Pakudhi Audio Books - MP3 - YouTube
Playlist திருஅருட்பா
2.வள்ளல் பெருமான் பதிப்பித்த ஒழிவிலொடுக்கம், சின்மய தீபிகை ஆகியவற்றை முழுவதும் எளிமையாக்கி விளக்கத்துடன் ஒலி நூலாக்கம் (Audio Book) செய்தது.
ஒழிவிலொடுக்கம் - Link to Listen
சின்மய தீபிகை - Link to Listen
3. திருஅருட்பா அருட்பெருஞ்ஜோதி அகவலுக்கு அமெரிக்கச் சன்மார்க்க அமைப்பின் மூலம் தொடர் விரிவுரை செய்தது.
அருட்பெருஞ்ஜோதி அகவல் முழுவிளக்கம்
4. தமிழ் நாடு அரசு நடத்திய வள்ளலார் 200 முப்பெரும் விழாக்களில் திருஅருட்பா மற்றும் சன்மார்க்கம் தொடர்பான கருத்தரங்கங்களில் ஆய்வாளராகப் பங்குகொண்டது.
5. வள்ளலார் மிஷன் அமைப்பின் மூலம் 3 மாதம் இணையத்தில் சுத்த சன்மார்க்க ஞானம் வகுப்புகள் நடத்தியது.
6. வள்ளல் பெருமானின் மாணவர்களும், தொண்டர்களும் வள்ளல் பெருமான் மீது பாடிய பிரபந்தங்களை இணையத்தில் தொகுக்கும் பணி
வள்ளலார் போற்றி: https://vallalarpootri.blogspot.com/
7. வள்ளல் பெருமானின் வழிவழித் தொண்டரும் எனது குருவுமான வடலூர் சன்மார்க்கப் பெரும்புலவர் சீனி. சட்டையப்பர் ஐயாவின் நூல்களை இணையத்தில் தொகுக்கும் பணி.
சீனி. சட்டையப்பர் ஐயா : https://vadalursattaiyappar.blogspot.com/
8. தொழுவூர் வேலாயுதனார் இயற்றிய "திருஅருட்பா வரலாறு" நூல் விளக்கம் - சொற்பொழிவு (மாதம் 2 ஆம் ஞாயிறு - இணைய வழியில் - வள்ளலார் யுனிவர்சல் மிசன் அமெரிக்கா) திருஅருட்பா வரலாறு
9. தனிப்பெருங்கருணை மாத இதழில் “இணையத்தில் சன்மார்க்கம்” என்னும் தலைப்பில் தொடர்க் கட்டுரைகள்.
10. சன்மார்க்க பேர்அறிஞரும் எனது ஆசிரியர்களில் ஒருவரும் ஆகிய. பேராசிரியர் முனைவர் வை.நமசிவாயம், நிறுவனர் வள்ளலார் கல்வி பயிற்சி ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் அவர்களைப்பற்றிய இணைய தளம்
பேராசிரியர் முனைவர் வை.நமசிவாயம் (dr-vai-namasivayam.blogspot.com)
11. தஞ்சாவூர் திரு. தம்பையா அவர்களின் அருட்பெருஞ்ஜோதி அறக்கட்டளையில் தொடர் "அருட்பெருஞ்ஜோதி அகவல்" விளக்க சொற்பொழிவு (மாதம் முதல் ஞாயிறு).
நடைபெற்று வரும் பணி:
1. திருஅருட்பா/ வள்ளலார் தொடர்பான வள்ளலார். ஆர்க் (Vallalar.org)/ வள்ளலார்ஸ்பேஸ். ஆர்க்(Vallalarspace.org)/ திருஅருட்பா.ஆர்க் (thiruarutpa.org)/ சன்மார்க்கம்.காம் (sanmarkkam.com) முதலியற்றின் இணையதளம்/ கைப்பேசி செயலிகள் உருவாக்கம்/ மேம்பாட்டுத் திட்டப்பணிகளின் உறுப்பினராகச் செயல்படுதல்.
2.திருஅருட்பா 6 திருமுறைகளுக்கும் எளிய சன்மார்க்க விளக்க உரைகள் செய்து ஒலி நூலாக்கம் செய்தல் (Vallalar Mission USA and Arutpa TV ஆகியோருடன் இணைந்து)
Vallalar Universal TV - YouTube
Thiruvarutpa tv l Vallalar songs - YouTube
3. 20 ஆண்டுகளாக 1000 க்கும் மேற்பட்ட சன்மார்க்க சங்க அமைப்புகளின் நிகழ்வுகளின் தொடர் சன்மார்க்க தத்துவ வகுப்புகள்/ ஆய்வுரைகள்/ சொற்பொழிவுகள் செய்து வருதல்
4. "சன்மார்க்க ஞான முரசு" மாத இதழில் திருஅருட்பா ""திருஅருண்முறையீடு" பதிகத்திற்க்கு தொடர் விளக்க உரைகள் எழுதி வருதல்.
e - Magazine - Vallalar Mission
5. "வடலூர் வள்ளலார் கல்விப் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனத்தின்" பாட ஆசிரியர்.
6. "தனிப்பெருங்கருணை" மாத இதழில் “திருஅருட்பா பதிகம் ஒரு பார்வை” என்னும் தலைப்பில் தொடர்க் கட்டுரைகள் எழுதிவருதல்.
7. திருஅருட்பா ஆறு திருமுறைகளையும், பதம் பிரித்த நடையில் இசை இல்லாமல் ஒலி நூலாக்கும் பணி
திருஅருட்பா 6ஆம் திருமுறை ஒலி நூல்கள்
8. திருஅருட்பா 6 ஆம் திருமுறை பாடல்களுக்கு சன்மார்க்க உரை எழுதும் பணி
(வள்ளலார் யுனிவர்சல் மிசன் அமெரிக்கா அமைப்பின் வேண்டுகோளின் படி)
9. திருஅருட்பா உரைநடைப் பகுதியிலுள்ள உபதேச குறிப்புகளுக்கு விளக்க வகுப்பு
(வள்ளலார் யுனிவர்சல் மிசன் அமெரிக்கா அமைப்பின் வேண்டுகோளின் படி)
10. "ஞானத்திண்ணை" மாத இதழில் “வழிகாட்டும் வள்ளலார்” என்னும் தலைப்பில் தொடர்க் கட்டுரைகள் எழுதிவருதல்.
இனி வெளிவர உள்ள நூல்கள்:
1. அருட்பெருஞ்ஜோதி அகவல் முழுவதும் வினா விடை வடிவில்
2. திருஅருட்பா 1-6 திருமுறை பாடல்களுக்கு எளிய சன்மார்க்க உரை
3. திருஅருட்பா - தெய்வமுறைத் தொகுப்பு
4. திருஅருட்பா - அனுபவமுறைத் தொகுப்பு
5. வள்ளலாரின் உபதேசக் குறிப்புகளுக்கு - திறனாய்வு/ விளக்கம்
மேலும் பணிகள் சேர்க்கப்படும்......
பெற்ற விருதுகள்:
சன்மார்க்க பாரதி - 2004 - திருமுதுகுன்றம் சன்மார்க்க சங்கம்
சித்தாந்த நன்மணி- 2008 - திருவாவடுதுறை அதீனம்
சித்தாந்த ரத்தினம் - 2009 - திருவாவடுதுறை அதீனம்
திருஅருட்பாத் திருவினர்- 2018 - திருக்குறள் நெறி ஆசான் புலவர். சிவராம சேது, திருமுதுகுன்றம்
Transdisciplinary Excellence Award - 2022 - Siddha Vetha University USA
சன்மார்க்கச் செம்மல் - 2023 - மேட்டுக்குப்பம் அன்னாதான ஆதீனம்
அகவல் அமுதன்- 2024 - வள்ளலார் யுனிவர்சர் மிஷன், அமெரிக்கா.
சன்மார்க்க சால இணையர்- 2024 - வள்ளலார் யுனிவர்சர் மிஷன், அமெரிக்கா.
(ஆனந்த பாரதி - தனலட்சுமி ஆகிய இருவருக்கும் 2024 - வள்ளலார் யுனிவர்சல்
மிஷன், அமெரிக்கா அமைப்பால் இவ்விருது வழங்கப்பட்டது)
09. அருட்பா அறிஞர் - 2025 - பிறையாறு சிதம்பர சுவாமிகள் தயா நிலையம்.
10. தமிழ் நாடு ஆளுநர் விருது - 2025 - ஆர் என். ரவி அவர்கள், ஆளுநர் மாளிகை. சென்னை
11. திருஅருட்பாச் செல்வர் - 2026 - சத்திய சாய் & சன்ஸ், திருமுதுகுன்றம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக